இன்று காலை தினகரன் நாளிதழில் நான் படித்ததை அனைவரும் படிக்க தந்து இருக்கிறேன்.
நமது இந்தியா எதற்கு பஞ்சத்தை கொண்டு இருந்தாலும் திறமையான மனிதர்களுக்கு பஞ்சத்தை கொண்டு இருக்கவில்லை. ஆனால் அவர்களது திறமைகளை வெளிபடுத்துவதற்கு தான் வாய்புகள் இல்லை.
உங்களுக்காக இந்த செய்தி.
பரிசு வேண்டாம்
மாணவிகள் கண்ணீர்
கோவை, ஆக. 31: ‘பரிசு வேண்டாம்; ஷ¨ கொடுத்தால் போதும்‘ என்று கோவையில் நடந்த மராத்தான் போட்டியில், ஷ¨ இல்லாமல் கால்களில் ரத்தம் கசிய ஓடி, பரிசுகளை வென்ற அரசுப்பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.
கோவையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) சார்பில் மராத்தான் ஓட்டப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
18 வயதுக்கு குறைந்த மாணவிகள் பிரிவில் பங்கேற்ற புதுக்கோட்டை, முள்ளூர் அரசு பள்ளி மாணவிகள் சிலர் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். ஓட்டம் துவங்கி சில நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த இந்த மாணவிகள், தங்கள் கால்களில் ஷ¨க்கள் அணியாமல், வெறும் காலில் ஓட்டப் போட்டியில் பங்கேற்றனர். இதனால், கால்களில் காயம் ஏற்பட்டது. ரத்தம் கசிந்தது.
முதல் 10 இடங்களில் கணிசமானவற்றை இந்த பள்ளி மாணவிகள் பிடித்திருந்தனர். 9ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி 2ம் இடத்தையும், 10ம் வகுப்பு கவிதா 4ம் இடத்தையும் பிடித்தனர். இந்த மாணவிகள், கால்களில் ஷ¨க்கள் அணிந்திருக்கவில்லை.
மாணவிகள் விஜயலட்சுமி, கவிதா ஆகியோர் கூறுகையில், ‘‘இந்த போட்டியில் பங்கேற்க பள்ளியில் இருந்து 12 பேர் கோவை வந்துள்ளோம். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். ஷ¨ மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இந்த ஓட்டத்தில் பங்கேற்ற எங்களில் பெரும்பாலானோருக்கு கால் பாதம் வெடித்து விட்டது. இந்த வலி ஒரு வாரம் இருக்கும். பல போட்டிகளில் பங்கேற்று விட்டதால் பழகி விட்டது. ஷ¨க்கள் இருந்தால் மேலும் சாதனைகள் புரிய வாய்ப்பாக இருக்கும். எங்கள் தேவை இப்போது பரிசுகளல்ல. கால்களைப் பாதுகாக்கும் ஷ¨க்கள் மட்டுமே’’ என்றனர்.
இரத்தம் வடிந்தது இவர்கள் காலில் மட்டும் அல்ல. ஒவ்வொரு உண்மையான இந்தியனின் இதயத்திலும்தான். அரசியல்வாதிகள் பேசுவதற்காக மட்டுமே உள்ளவர்கள். ஒரு சிபாரிசு கடிதத்திற்கு இரண்டு லட்சம் வரை லஞ்சம் வாங்குபவர்கள். இவர்களை நம்பினால் நமக்கு முடி கூட மிஞ்சாது.
நமது வசிப்பிடங்களுக்கு அருகிலும் இவர்களை போன்றவர்கள் இருக்கலாம். இதை படிக்கும் இரக்க குணம் உள்ள வசதி படைத்த இந்தியர்கள் இவர்களை போன்றோருக்கு உதவலாமே.
Sunday, August 31, 2008
இந்தியன் என்று சொல்லடா. தலை குனிந்து நில்லடா.
Monday, July 28, 2008
இலவசமாய் சாஃப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யலாம்
இன்றைய தலைப்பு போர்ட்டபிள் சாஃப்ட்வேர்.
பெயரை பார்த்தவுடனே பெரும்பாலானவர்க்கு புரிந்திருக்கும். இந்த சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று அதில் உள்ள Exe பைலை டபுள் கிளிக் செய்தாலே போதும். இயங்கத் தொடங்கி விடும்.
கையில் கிடைக்கும் சாஃப்ட்வேர்களை எல்லாம் இன்ஸ்டால் செய்து கொண்டேயிருந்தால் போகப் போக நமது கணிணி மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடும். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக போர்ட்டபிள் சாஃப்ட்வேர் உள்ளது. பெரும்பாலான போர்ட்டபிள் சாஃப்ட்வேர்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.Google-ல் Download Portable Software என்று கொடுத்தால் நிறைய தளங்கள் நமது பார்வைக்கு கிடைக்கின்றன.
என்னதான் போர்ட்டபிள் சாஃப்ட்வேர்கள் இந்த வகையில் பயனுள்ளதாக இருந்தாலும் அதில் முழுமையான சாஃப்ட்வேர்களில் சில வேலைகளை செய்ய முடியாது. உதாரணமாக Corel Draw Portable சாஃப்ட்வேரில் டிசைன் செய்தவைகளை Save செய்ய முடியாது. VLC Media Player Portable Software Open ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
இப்படி பிரச்சனைகள் இருந்தாலும் நிறைய பேர் Portable சாஃப்ட்வேர்களை பயன்படுத்ததான் செய்கின்றனர்.
உங்களுக்காக போர்ட்டபிள் சாஃப்ட்வேர்களை தரும் லிங்க்குகள் கீழே தரப்பட்டுள்ளன.
Portablefreeware
Portableapps
Softpedia.com/get/PORTABLE-SOFTWARE/
Softwareportables.blogspot.com
Downloadsoftwarez.blogspot.com
Sunday, July 20, 2008
C Driveஐ மறைக்க வேண்டுமா?
நம்மில் பலர் பெர்சனல் ஃபைல்களை உருவாக்கி அதை மறைக்க பல்வேறு பிரயத்தணங்கள் செய்வர். அதற்கு நிறைய சாஃப்ட்வேர்கள் கூட இருக்கின்றன. இதையெல்லாம் விட எளிய வழி நமது Windows XPயிலேயே உள்ளது. அந்த எளிய வழி ஃபைல் இருக்கும் Driveஐயே Hide செய்ய வேண்டியதுதான். இது தேவையில்லாத வேலை என்றுதான் அனைவரும் சொல்வர். உங்களிடம் எத்தனை பார்ட்டீசியன்கள் உள்ளன என்று உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும்போது வேறு யாரும் அந்த டிரைவை Open செய்ய மாட்டார்கள். அதனால் இது எளிதான பாதுகாப்பு முறையே.
இதற்கு முதலில் Start Menuவை கிளிக் செய்து Run என்பதை தேர்வு செய்யவும். அதில் gpedit.msc என்பதை டைப் செய்து ok கிளிக் செய்யவும். இப்போது Group Policy என்ற விண்டோ Open ஆகும். User Configuration என்பதில் Administrative Templates என்பதன் அருகில் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும். இப்போது Windows Components --> Windows Explorer என்பதை தேர்வு செய்யவும். வலதுபுறம் தோன்றும் Listல் Hide these specified drives in my computer என்பதில் Double Click செய்யவும். தோன்றும் விண்டோவில் Enabled என்னும் Radio Buttonஐ தேர்வு செய்யவும். கீழே தோன்றும் List Boxல் எந்த Driveஐ Hide செய்ய வேண்டுமோ அந்த Driveஐ செலக்ட் செய்து ok Click செய்யவும். இப்போது அந்த டிரைவ் மறைந்திருப்பதை பார்க்கலாம்.
மறைக்கப்பட்ட டிரைவை பார்க்கவேண்டுமானால் Windows Explorer Address Barல் எந்த டிரைவை பார்க்க வேண்டுமோ அந்த டிரைவின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும். எழுதியது புரியவில்லை என்றால் அருகில் உள்ள Videoவை பாருங்கள்.
Wednesday, July 16, 2008
Rapid Search
எனது ரேப்பிட்ஷேரில் தேடுவது எப்படி என்ற பதிவிற்கு விமர்சனம் எழுதிய திரு.ராஜா அவர்களுக்கு நன்றி. தாங்கள் கூறியதை நானும் செய்து பார்த்தேன். முன்பு வேலை செய்து கொண்டிருந்தது தற்போது வேலை செய்யவில்லை தான்.
ரேப்பிட்ஷேரில் தேடுவது மிகவும் கடினமாகத்தான் எனக்கும் நேற்று வரை இருந்தது. தற்போது அந்த பிரச்சனை தீரப்போகிறது. ரேப்பிட்ஷேரில் தேடுவதற்காகவே உள்ளதுதான் Rapid Search Engine இந்த வலைத்தளத்தில் எதையாவது தேடச் சொன்னால் அது வலைத்தளங்களிலிருந்து ரேப்பிட்ஷேரில் உள்ள ஃபைல்களை மட்டும் எடுத்துத் தருகிறது. மேலும் இதில் Ajaxயையும் பயன்படுத்தலாம். Ajax பயன்படுத்துவதன் மூலம் நமது தேடலுக்கான பதில்கள் மிகவும் விரைவாக கிடைக்கிறது. இது அனைவருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
Tuesday, July 15, 2008
RapidShare-ல் தேடுவது எப்படி?
ரேப்பிட்ஷேர் - அனைவருக்கும் தெரிந்த வெப்சைட்.
தற்போது ஃபைல்களை ட்ரான்ஸ்பர் செய்வதற்கு பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.
பெரும்பாலான சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்ய தேடும்போது பெரும்பாலும் ரேப்பிட்சேர் வெப்சைட்டில் தான் கிடைக்கும்.
இந்த வெப்சைட்டில் இலவச பயனராக இருந்தால் டவுன்லோட் செய்வதற்கு சில நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இக்காலத்தில் யாரும் காத்திருக்க விரும்புவதில்லை. அதற்கு கீழே உள்ள ஸ்கிரிப்ட்டை காப்பி செய்து அட்ரஸ் பாரில் வைத்து எண்டர் செய்யவும்.
javascript:alert(c=0)
தற்போது ஒரு சின்ன தகவல் பெட்டி தோன்றும். அதில் Ok கிளிக் செய்தால் உடனே டவுன்லோட் ஆவதற்கான சுட்டி கிடைக்கும்.
மேலும் Googleன் மூலம் பல ஃபைல்களை Rapidshareல் கண்டுபிடிக்க PKP அவர்கள் எழுதிய Rapidshare-ல் தேடுவது எப்படி? பதிவை பார்க்கவும்.
உதாரணத்திற்கு அவர் பதிவில் உள்ளதில் சில
கூகிள் வழி rapidshare-ல் தேட Google -ல் இதை டைப்புங்கள்
Video files எனில்
avi|mpg|mpeg|wmv|rmvb site:rapidshare.de
Music files எனில்
mp3|ogg|wma site:rapidshare.de
Programs,Applications files எனில்
zip|rar|exe site:rapidshare.de
eBooks files எனில்
pdf|rar|zip|doc|lit site:rapidshare.com
(Optionally add the word what you are particularly looking for.
உதாரணமாக தமிழ் சம்பந்த பட்ட mp3 கோப்புகள் தேட
mp3|ogg|wma site:rapidshare.de tamil என கூகிளில் தட்டுங்கள்)
Friday, July 4, 2008
கற்றுக் கொள்வோம்
எல்லாரும் எல்லாமும் தெரிந்து இருக்க முடியாது. அனைவருக்கும் எதிலாவது சந்தேகம் நிச்சயமாய் ஏற்படும். முன்பெல்லாம் சந்தேகம் ஏற்படும்போது அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் தான் கேட்க முடியும். அதில் சிலர் நேரடியாக கேட்பதற்கு வெட்கப்படுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இணைய வழிக் கற்றல் பெருகிவிட்டது. Googleல் Tutor என்று தேடினால் நிறைய வெப் பக்கங்கள் கிடைக்கின்றன.
அப்படித் தேடியபோது கிடைத்ததுதான் Good Tutorials. இதில் போட்டோஷாப், ஃப்ளாஷ், மாயா, பி.ஹெச்பி. மேலும் சில சாஃப்ட்வேர்களைப் பற்றிய Tutorகள் கிடைக்கின்றன.
இதே போன்று W3Schools என்னும் தளத்தில் வெப் டிசைனிங் பற்றிய சில குறிப்புக்கள் உள்ளன.
Flash பற்றி படிக்க விரும்புவர்களுக்கு நிச்சயம் இந்த சுட்டி உதவியாக இருக்கும்.
Monday, June 23, 2008
PHP Maker
அதிக ஞானம் இருப்பவர்களால் தான் அதிகம் எழுத முடியும் என்பது உண்மைதான். பதிவுகளை எழுதுவதற்கு நிச்சயம் அதிகம் படிக்க வேண்டும். நேரமில்லை என்பது சோம்பேறிகளின் சொல். இதனால் இனி நான் நிறைய எழுத நிறைய படிக்கப் போகிறேன்
எனது நண்பர் ஒருவர் PHP பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவருக்காக இண்டர்நெட்டில் உலவியபோது கிடைத்தது தான் PHP Maker
இது SQL தரவுகளை எளிதாக PHPல் மாற்றித் தருகிறது. இதன்மூலம் இணையப் பயனர்கள் நம்முடைய தரவுகளை எளிதாக கையாள வழிசெய்கிறது.
இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதன் Features Pageற்கு செல்லுங்கள். இங்கு இதற்கான Demoவினையும் வைத்துள்ளார்கள். இதைப்பற்றிய சந்தேகங்களுக்கு FAQ பகுதியில் சென்று பார்த்தால் மேலும் விளக்கங்கள் தந்துள்ளார்கள்.
Download : PHP Maker
பாஸ்வேர்ட் கேட்டால் rajeshkuma2006@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும்
Download : PHP E Books
Friday, June 13, 2008
Maya Learning Edition
கணிப்பொறித் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கிராமத்தில் வசிக்கும் பாமர மக்களைக்கூட அதிசயிக்க வைக்கும் சக்தி கிராஃபிக்ஸ் துறைக்கு உண்டு. சினிமாவில் த்ரில்லிங்கான சில காட்சிகளை கிராஃபிக்ஸ் மூலம் எடுத்திருப்பார்கள். ஆனால் நம் கிராமத்து இளசுகள் நம்ம தலைவர் ரொம்ப ரிஸ்க் எடுத்திருப்பார் என்று சொல்வார்கள். ஆனால் இதில் ரிஸ்க் எடுப்பவர்கள் சினிமா நடிகர்கள் அல்லர். கம்ப்யூட்டர் முன் மணிக்கணக்கில் உட்கார்ந்து அதை டிசைன் செய்தவர்களே.
கணிப்பொறித் துறையில் சாதிக்க + சம்பாதிக்க விரும்பும் பலர் தேர்ந்தெடுப்பது மல்டிமீடியா துறையே. அந்த அளவிற்கு வருமானத்தையும், புகழையும் கொடுக்கக்கூடியது மல்டிமீடியா துறை. இந்த துறையில் பலதரப்பட்ட மென்பொருள்கள் இருந்தாலும், பலரும் அறிந்தது மாயா மென்பொருளே.
மாயா மென்பொருளின் சமீபத்திய வெளியீடான மாயா 8.5 சாஃப்ட்வேரை டோரண்ட் மூலம் டவுன்லோட் செய்யும்போது Macintoshக்கு உரிய சாஃப்ட்வேர் மட்டுமே கிடைக்கிறது. என் போன்று அந்த சாஃப்ட்வேரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லை. அதற்கு Maya Personal Learning Edition சாஃப்ட்வேர் போதும். இந்த பதிப்பை பெற விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதன்பின் கிடைக்கும் Linkல் இருந்து டவுன்லோட் செய்யலாம்.
மாயா சாஃப்ட்வேரை பற்றிய Tutor Video பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
Download : Understanding 3D Animation E-Book
Tuesday, June 10, 2008
Friday, June 6, 2008
Torrentz ஒரு பார்வை
டோரண்ட் - இணைய உலகத்தில் எதையாவது டவுன்லோட் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் அறிந்த வார்த்தை. டோரண்ட் மூலம் டவுன்லோட் செய்யும் போது அப்லோட் மற்றும் டவுன்லோட் ஒரே நேரத்தில் நடைபெறும். இணைய சர்வரில் இருந்து ப்ரௌசர் மூலமாக டவுன்லோட் ஆகும் டோரண்ட் ஃபைல் நமது கணிப்பொறியின் தன்மை மற்றும் இணையத்தின் வேகம் பற்றிய தகவல்களை சர்வருக்கு அனுப்பும். பின்னர் தான் நமக்கு தேவையான ஃபைல் முழுமையாக டவுன்லோட் ஆகத் தொடங்கும்.
இந்த முறையில் நாம் டவுன்லோட் செய்யும் ஃபைலானது முழுமையாக சர்வரில் இருந்து டவுன்லோட் ஆவதில்லை. மேலே இருக்கும் படத்தை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும். இணையப் பயனர்கள் வழியாக ஃபைலானது பிரித்து அளிக்கப்படும்.
காஷ்லாஜிக்கின் கருத்துப் படி 35% வீதமான நெரிசல்கள் இவ்வகையான கோப்புப் பரிமாற்றத்தினாலேயே ஏற்படுகின்றது.
இது போன்ற டோரண்ட்களை டவுன்லோட் செய்ய விரும்புபவர்கள் Opera ப்ரவுசரை பயன்படுத்தலாம். டோரண்ட்கள் பற்றி மேலும் தமிழில் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
டோரண்ட்களை டவுன்லோட் செய்ய சிறந்த வெப்சைட் www.torrentz.com
Sunday, June 1, 2008
IPL Final Match
Chennai Super Kings Vs Rajasthan Royals

Link Provider : http://livecrickntech.blogspot.com
ஆன்லைன் மேட்ச் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Saturday, May 24, 2008
VLC Media பிளேயர்
பதிவுகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. படிக்க ஆரம்பித்தால் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிடும் சக்தி படிப்பிற்கு உள்ளது என்பது உண்மைதான். தேர்வு நெருங்கியதால் படிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து பதிவுகளை எழுத நேரமில்லாமல் போய்விட்டது.
வீடியோ பைல்களை அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க வேண்டி உள்ளது. படம் பார்த்தல், குழந்தை பருவத்தில் எடுத்த வீடியோக்கள் மற்றும் பல வீடியோ பைல்களை பார்க்க வேண்டி உள்ளது. இதுபோன்ற வீடியோ பைல்களை பார்ப்பதற்கு அதிகமானோர் பயன்படுத்துவது விண்டோஸ் மீடியா பிளேயர் தான். காரணம் இது விண்டோஸ் உடன் இணைந்து கிடைப்பதே. இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக பல ஃபார்மட் வீடியோ பைல்கள் வந்துவிட்டன. நிறைய ப்ளேயர்கள் வந்துவிட்டன. அதில் சில ஃபார்மட் பைல்களை சில ப்ளேயர்களில் பார்க்க முடியாது. உதாரணமாக விண்டோஸ் மீடியா ப்ளேயரில் 3GP, DVD பைல்களை பார்க்க முடியாது. அதற்காக அதற்குரிய Codec பைல்களை Download செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை குறைக்கும் விதத்தில் உள்ளதுதான் VLC Media Player. இதில் 24 formatகளில் உள்ள பைல்களை பார்க்க முடியும்.
பல்வேறு பார்மட்களில் உள்ள வீடியோ பைல்களை பார்ப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
Download செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
Download – VLC Media Player
VLC Media Player பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
தினம் ஒரு வெப்சைட்
அனைத்து விதமான புத்தகப் பிரியர்களுக்கு ஏற்ற இ-புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்திட கிளிக் செய்ய வேண்டிய முகவரி Allfree.fermanaziz
Sunday, May 4, 2008
இணைய சட்டங்கள்
தகவல் தொழில்நுட்ப மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மே 2000ல் நிறைவேறியது. ஆகஸ்டு 2000ல் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 ஆக சட்ட வடிவம் பெற்றது. தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ல் இணைய சட்டங்கள் உள்ளன.
தரவு திருட்டு
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சிறப்பு ஷரத்துகளில் சில: ஆபாச உள்ளடக்கம் மற்றும் படங்களை பிரசுரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆபாச உள்ளடக்கம் குறித்த வரையறை ஆபாச உள்ளடக்கங்களை சிறுவர்களுக்கு விற்பது சட்டவிரோதம்
ஆபாச உள்ளடக்கம் மற்றும் படங்களை பிரசுரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு XI பத்தி 67ன் படி, இந்திய அரசு இணைய வழி ஆபாச உள்ளடக்கம் மற்றும் படங்களை விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தெளிவாக கருதுகிறது. இந்த பத்தி இவ்வாறு குறிப்பிடுகிறது:
"எலெக்ட்ரானிக் வடிவத்தில் ஆபாசமாக தோற்றமளிக்கும் தகவல்களை பிரசுரம் செய்வது: இணையப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பார்ப்போர் அல்லது படிப்போர் அல்லது கேட்போர் யாருடைய மனதிலும் காம உணர்வினைத் தூண்டி அவர்களை தவறான பாதைக்கு தூண்டும் சக்தி வாய்ந்த ஆபாசமான உள்ளடக்கங்களை வெளியிடுவோர், பரப்புவோர் அல்லது எலெக்ட்ரானிக் வடிவத்தில் வெளியாக காரணமாக இருப்போர் யாராக இருப்பினும், அவர்கள் முதன் முறை குற்றம் உறுதி செய்யப்பட்டவராய் இருந்தால் 5 ஆண்டு காலம் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரையான அபராதத்திற்கு தகுதி உடையவராகவும், இரண்டாம் முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறையாக குற்றம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால் 10 ஆண்டு காலம் வரை சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் வரையான அபராதத்திற்கு தகுதி உடையவராகவும் ஆகிறார்".
ஆபாச உள்ளடக்கத்திற்கான வரையறை இந்திய குற்றவியல் சட்டம் 1860, செக்ஷன் 292 கூறுகிறது: "துணை பிரிவு (2)க்காக, இணையப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பார்ப்போர் அல்லது படிப்போர் அல்லது கேட்போர் யாருடைய மனதிலும் காம உணர்வினைத் தூண்டி அவர்களை தவறான பாதைக்கு தூண்டும் சக்தி வாய்ந்த எந்த ஒரு புத்தகம், துண்டுப் பிரசுரம், பேப்பர், கையால் எழுதியது, வரைபடம், ஓவியம் சித்திரம் அல்லது வேறு எந்த ஒரு பொருளும் ஆபாசமாக கருதப்படும்". ஆபாச உள்ளடக்கங்களை சிறுவர்களுக்கு விற்பது சட்டவிரோதம் இந்திய குற்றவியல் சட்டம் 1860, செக்ஷன் 293 ஆபாசமான பொருட்களை சிறுவர்களுக்கு விற்பதற்கு எதிரான சட்டத்தை தெளிவாக குறிப்பிடுகிறது. இந்த பிரிவில் கூறப்படுவதாவது: "ஐபிசி 292ல் (வரையறை கொடுக்கப்பட்டுள்ளது) குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு ஆபாச உள்ளடக்கங்களையும் 20 வயதுக்கு குறைந்த எந்த ஒரு சிறுவருக்கும் விற்பதோ, வாடகைக்கு தருவதோ, விநியோகம் செய்வதோ, பார்வையிட காண்பிப்பதோ அல்லது பிற வழிகளில் அனுப்புவதோ அல்லது இது போன்ற செயல்களை செய்வதாக கூறி ஆர்வத்தை தூண்டிவிடுவதோ தண்டனைக்குரியதாகும். (முதன் முறையாக குற்றம் உறுதி செய்யப்பட்டவருக்கு 3 வருடம் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம், இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட முறையாக குற்றம் உறுதி செய்யப்படுபவருக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம்)".
Thursday, April 24, 2008
Saturday, April 19, 2008
கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல்., "டுவென்டி20' அதிரடி தொடர் ஆரம்பமாகிவிட்டது. சென்னை அணிக்கு கேப்டனாக தோனி, மும்பை அணிக்கு "ஓபனிங் பேட்ஸ் மேன்களாக' சச்சின், ஜெயசூர்யா, கோல்கட்டா அணியின் உரிமையாளராக பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் என ஒவ்வொரு விஷயமும் இத்தொடரில் மிகவும் வித்தியாசமாக உள்ளது. உலகின் அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்பதால், ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டிகளை கண்டு களிக்கலாம்.
எனது நண்பர்களுக்காக கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பினை தந்துள்ளேன். அனைவரும் கண்டு ரசியுங்கள். பார்ப்பதற்கு கண்டிப்பாக உங்களிடம் சாப் கேஸ்ட் பிளேயர் வேண்டும்.
www.sopcast.comஇந்த வெப்சைட்டில் இருந்து சாப் கேஸ்ட் பிளேயர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
வாருங்கள் கிரிக்கெட் பார்க்கலாம்.
பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி.
Channel 1
Channel 2
Sunday, April 13, 2008
எக்சலில் பயன்படும் சில எளிய வழிமுறைகள்
எம்.எஸ்.எக்சல் பயன்பாட்டாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பலவகையான வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வகையான வசதிகளை நாம் அறிந்து பயன்படுத்தும் போது எளிமையான மற்றும் விரைவான பயன்களை பெற முடிகிறது. இவ்வாறு பயன்படக்கூடிய சில எளிய மற்றும் மிகவும் பயன்படக்கூடிய சில வழிமுறைகளை இங்கே அறிந்துக் கொள்வோம்.
1. வெவ்வேறு வகையான மதிப்புகளை எளிதில் வேறுப்படுத்திக் காட்ட...
உங்கள் எக்சல் கோப்புகள் சிறப்பான தோற்றம் பெற்றிருக்க வேண்டுமா?
ஒரு எக்சல் கோப்பில் மதிப்புகள் மற்றும் அட்டவணைகளை வேறுப்படுத்திக் காட்ட வேண்டும் என விரும்பினால் அதற்கான வாய்ப்புகளை எக்ஸல் சில சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது. எடுத்துகாட்டாக நீங்கள் சில எண் மதிப்புகளை, கூடுதல்களை இவற்றை உங்கள் எக்சல் கோப்பில் வேறுபடுத்திக் காட்ட விரும்புகிறீர்கள் என் வைத்துக் கொள்வோம். அதில் உள்ள மதிப்புகளை கூட்டி காட்டுவதற்கான வழிமுறையானது.
முதலில் எந்த கட்டத்தினை (செல்லை) ஃபார்மெட் செய்ய வேண்டுமோ அங்கே கிளிக் செய்யவும். பின் கண்ட்ரோல் 1(Ctrl+1) என்று அழுத்தினால் அதில் கீழ்காணுமாறு ஒரு டயலாக் பாக்ஸ் திறக்கிறது. அதில் அண்டர் லைன் என்கிற காம்போ பாக்ஸை கிளிக் செய்தால்
சில வாய்ப்புகள் காட்டப்படும். இவற்றில் உள்ள வாய்ப்புகள் சரியாக பயன்படுத்துவதற்கான வழிகள் என்னவெனில், ஸிங்கிள் (Single) மற்றும் டபுள்(Double) ஃபார்மெட் (format) போன்றவை எல்லா வகையான தலைப்புகளுக்கும் ஏற்ற அமைப்பு முறையாகும். பகுதி கூடுதல்கள் மற்றும் இறுதி கூடுதல்களை மற்ற செல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட சிங்கிள் அக்கௌண்டிங் மற்றும் டபுள் அக்கௌண்டிங் முறையில் அவற்றை ஃபார்மெட் செய்யலாம். சரியாக பகுதி கூடுதல்களை சிங்கிள் அக்கௌண்டிங் முறையிலும் இறுதி கூடுதல்களை டபுள் அக்கௌண்டிங் முறையிலும் ஃபார்மெட் செய்வதால் சிறப்பாக வடிவமைக்க முடியும்.
2. பூஜ்ஜிய மதிப்புகளை ஒரு எக்சல் கோப்பிலிருந்து நீக்க...
ஏதேனும் ஒரு ஃபார்முலாவின் மூலம் சில இடங்களில் பூஜ்ஜிய மதிப்புகள் உருவாகி விடுகின்றன எனக் கொள்வோம். அந்த பூஜ்ஜிய மதிப்புகளுடன் நாம் கோப்பை வைத்திருத்தல் சரியான அணுமுறையாகாது. இவற்றை நீக்க பொதுவாக குறிப்பிட்ட ஃபார்முலாக்களை பூஜ்ஜியமதிப்புகள் உருவாகும் செல்களிலிருந்து நீக்க வேண்டும். இம்முறை மிகவும் நேரம் பிடிக்கும் ஒரு முறையாகும். இதனை எளிதாக நிகழ்த்த டூல்ஸ் -> ஆப்ஷன்ஸ் என்னும் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும் அதனால் தோன்றும் விண்டோவில் 'வியூ' என்னும் டாபில் ஜீரோ வால்யூஸ் என்ற தேர்வை மாற்றினால் பின் பூஜ்ஜிய மதிப்புகள் உங்கள் கோப்பில் இருந்து மறைந்து விடும்.
ஒரே செல்லில் தட்டச்சு செய்யும் போது ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளை தட்டச்சு செய்ய ஆல்ட் + என்டர் என்று அழுத்தவும். இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகள் ஒரே செல்லில் தோன்றும். இதற்கு 'வேர்ட் ராப்' என்ற அமைப்பை எக்சல் ஏற்படுத்திக் கொள்கிறது. இவ்வாறு செய்யப்பட்ட ஃபார்மெட்டிங்கை நீக்க. ஃபார்மெட் -> செல்ஸ் என்பதில் 'அலைன்மென்ட்' என்ற வாய்ப்பை தேர்வு செய்து 'வேர்ட் ராப்' என்பதை நீக்க வேண்டும்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட வொர்க் ஷீட்களை ஒரே திரையில் பார்க்க...
ஒரே கோப்பின் வெவ்வேறு வொர்க் ஷீட்களை ஒரே திரையில் வைத்துப் பார்க்க விண்டோ என்ற மெனுவின் நியூ விண்டோ என்ற சப் மெனுவை கிளிக் செய்தால் புதியதாக ஒரு விண்டோவில் அதே கோப்பு திறக்கும். அதில் நீங்கள் பார்க்க விரும்பிய வொர்க் ஷீட்களை தேர்வு செய்து பார்க்கலாம். மேலும் இவ்வாறு தோன்றும் வொர்க் ஷீட்களும் ஒரே ஸ்கிரீனில் தோன்ற செய்ய 'விண்டோ' மெனுவிலிலிருந்து 'அரேஞ்ஜ்' என்ற வாய்ப்பை தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் விரும்பியவாறு வொர்க் ஷீட்களை வரிசைப் படுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
4. ஒரே வொர்க் ஷீட்டின் வெவ்வேறு பகுதிகளை ஒப்பிட்டு காண...
இப்போது நாம் ஒரே வொர்க் ஷீட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மதிப்புகளை ஒப்பிட்டு காண விரும்பினால் நாம் 'விண்டோ' மெனுவில் உள்ள ஸ்பிலிட் மற்றும் ஃப்ரீஸ் ஆப்ஷன்களைப் பயன்படுத்தலாம். ஸ்பிலிட் ஆப்ஷனில் நாம் எந்த இடத்தில் உள்ள செல்லை தேர்வு செய்துள்ளோமோ அதனை மையமாக கொண்டு மற்ற இடங்கள் ஸ்பிலிட் அதாவது பிரிக்கப்படும். இதனால் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியையும் நாம் தனித்தனியாக ஸ்க்ரால் செய்து பார்க்க முடிகிறது. இதே போல் ஃப்ரீஸ் ஆப்ஷனானது நாம் தேர்வு செய்த ஒரு ரோவையோ அல்லது காலமையோ மட்டும் அசையாமல் நிறுத்தி வைக்கப்பயன்படுகிறது. இந்த பயன்பாடுகள் மிக எளிதாக ஒரு அட்டவணையின் வெவ்வேறு பகுதிகளை காணப்பயன்படுகிறது.
Wednesday, April 9, 2008
Thursday, April 3, 2008
Wednesday, March 26, 2008
இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மன நோய் ஏற்படும்
இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்களுக்கு மன நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இது இன்டர்நெட் யுகம். இன்டர்நெட் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானவர்களால் வாழவே முடியாது என்ற நிலை உள்ளது. இ-மெயில், சாட்டிங் என்று ஒரு நாளின் பெரும் பொழுதை இன்டர்நெட்டிலேயே பலர் செலவழிக்கின்றனர். இது போதாது என்று இரவு நேரங்களில் கண்விழித்து இன்டர்நெட்டில் பலான படங்களைப் பார்க்கின்றனர். இப்படி தினமும் இன்டர்நெட்டே கதி என்று பல மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பவர்களை இன்டர்நெட் அடிமைகள் என்று மனநல டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரியாவில் சுமார் 12 லட்சம் இளைஞர்களும், சீனாவில் 1 கோடி பேரும் இன்டர்நெட்டுக்கு அடிமைகளாக உள்ளனர். இவர்களில் பலர், இன்டர்நெட் பார்ப்பதற்காக பள்ளி, கல்லூரி படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்டவர்கள். வேலையை ராஜினாமா செய்துவிட்டு இன்டர்நெட் பார்ப்பவர்களும் உண்டு.
இப்படிபட்டவர்கள் மனநோய்க்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அதிக நேரம் இன்டர்நெட் பார்ப்பதால், சாப்பிடும், தூங்கும் நேரம் கூட மறந்துபோய் விடுமாம். குடும்பம், நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவார்களாம். இன்டர்நெட் பார்க்க முடியாமல் போனால் கோபம், ஆத்திரம் அதிகம் வரும் என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும், சில நாட்களிலேயே மீண்டும் இன்டர்நெட் பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். அதை தடுக்க முடியவில்லை என்று மனநல டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Monday, March 24, 2008
கம்ப்யூட்டர் வைரஸ்
Computer virus, கணினி வைரஸ் கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே பிரதியெடுக்கும் .exe மற்றும் ஏனைய கோப்புக்களைப் பாதிக்கும் ஓரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அக்கக்கணினி வலையமைப்பு) தாவி செல்லக்கூடிய சேமிப்பு ஊடகங்கள் எடுத்துக்காட்டாக பிளாஷ் டிஸ்க் போன்றவற்றாலும் பரவுகின்றது.
அநேகமான கணினிகள் இன்று இணையத்துடனும் அகக்கணினி வலையமைப்புடனும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கணினிகள் virusகளைப் பரப்புவதற்கும் உதவுகின்றன. இன்றைய virusகள் உலகாளவிய வலையமைப்பு, மின்னஞ்சல் மற்றும் கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புக்களூடாகவும் பரவுகின்றன.
கணினி வைரஸ் ஆனது இயற்கையான virus போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும். virus பலவாறு பரப்பப்படும் இவ்வகைச் செயற்பாடானது கெட்டமென்பொருள் en:Malware எனப்படும். பொதுவான பாவனையில் கணினி வைரஸ் என்பது கணினிப் புழுக்கள் en:Computer worm, நல்ல வைரஸ்கள்போல் நடிக்கும் வைரஸ்கள் en:Trojan horse (computing) எல்லாமே வைரஸ் என்றே அழைக்கப் படினும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபாடானவை. இவை கிருமி வைரஸ்களை ஒவ்வொரு கணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கின்றன. இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிவைரஸ்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது கடன் அட்டை இலக்கங்களைத் தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்கின்றன. சில சமயங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டுகளையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன. பின்னர் அவைகளைத் தனது எஜமானனுக்கு (Owner of that virus) இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன.
சில வைரஸ்கள் Programகளில் பாதிப்பினை ஏற்படுத்தி கணினிக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் கோப்புக்களை அழித்தல், கோப்புக்களின் குணாதிசயங்களை மாற்றுதல் (எடுத்துக்காட்டாக சிஸ்டம் கோப்பாகவோ, மறைக்கப்பட்ட கோப்பாகவோ) மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் பயனர் பாவிக்கும் நிரல்களுடன் குழப்பத்தை உண்டு பண்ணிக் கணினியை நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறான தவறான நிரல்களினால் கணினியில் தேவையான தரவுகளிற்கு அழிவுகள் ஏற்படலாம்.
கணினி வைரஸ்கள் கணினியில் அழித்தலை உண்டு பண்ணவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. சில வைரஸ்கள் கணினி ஆரம்பிப்பதை மெதுவாக்கும் அல்லது கணினி வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். சில வைரஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குணடுகள் போன்று குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் செயற்படும். பொதுவாக விண்டோஸ் கணினிகள் 30 செக்கண்களில் ஆரம்பிக்கும் இவை 40 வரை செக்கண் கூட எடுக்கலாம் மாறாக ஒரு கணினி விண்டோஸ் இயங்குதளத்தை ஆரம்பிக்க 1 நிமிடமளவில் எடுத்தால் முதலில் வைரஸ்களைச் சந்தேகிக்கலாம்.
Monday, March 17, 2008
மைக்ரோசாப்ட் ஆபீஸ் டிப்ஸ்
Password to open the document:
If it is applied then you have to give the correct password to open the document, otherwise you cannot open the document.
Password to modify the document:
If it is applied then you have to give the correct password to modify the document, otherwise your document is opened but you cannot modify the document. It means that your document becomes read-only.
To apply a password to document, follow these steps.
* Open Save As dialog box by selecting "Save As" command from File menu.
* Click "Tools" button of Save As dialog box and choose "General Options" from drop down menu, "Save" dialog box appears as shown in figure below.
* Enter first password in "Password to open" text box and second password in "Password to modify" text box (if required) and click "Ok" button of dialog box. Microsoft Word will open "Confirm Password" dialog box for the confirmation of passwords. The maximum length of password is 15 characters.
* Re-enter the password to open and password to modify and click "Ok" button of Confirm Password dialog boxes one by one.
* Click "Save" button of Save As dialog box.
Print Envelopes and Labels in Word
Word provides a suitable way to print envelopes and labels. You can print mailing and return addresses on an envelope, or addresses on a mailing label.
To create and print an envelope, follow these steps.
Choose Envelopes and Labels from the Tools menu. The Envelopes and Labels dialog box will appear as shown below.
Click the Envelopes tab to display options of Envelopes.
Enter (or Edit) the mailing address in the Delivery address box.
Enter (or Edit) the return address in the Return address box Or select the Omit check box to omit a return address.
Click Options button to specify the envelope size, the type of paper and other options. Click "Add to Document" button to add or attach the envelope to the current document for later printing or editing.
Click Print button to print the envelope.
You can also add graphics to the return address of your envelope. To add graphic, follow these steps.
Select mailing address in the document.
Open the Envelopes and Labels dialog box.
Click Add to Document (or Change Document) button.
Click the Page Layout view icon in the Status bar.
Insert or create the graphic in the document.
Position the item on the envelope.
Wednesday, March 12, 2008
Word Shortcuts
Select the menu bar or close an open menu and submenu at the same time. F10 or ALT
Select a task pane or toolbar after pressing F10 or ALT to select the menu bar. Pressing the keys repeatedly moves the focus among the open toolbars, menu bars, and task pane.
CTRL+TAB or CTRL+SHIFT+TAB
When a toolbar or menu bar is selected, select the next or previous button or menu.
TAB or SHIFT+TAB
Open the selected menu, or perform the action for the selected button or command.
ENTER
Display the shortcut menu for the selected item. SHIFT+F10
Display the title bar shortcut menu. ALT+SPACEBAR
When a menu or submenu is open, select the next or previous command.
DOWN ARROW or UP ARROW
Select the menu to the left or right. When a submenu is open, switch between the main menu and the submenu.
LEFT ARROW or RIGHT ARROW
Select the first or last command on the menu or submenu. HOME or END
Close an open menu. When a submenu is open, close only the submenu. ESC
Open the selected menu. SHIFT+DOWN ARROW
When a shortened menu is open, display the full set of commands. CTRL+DOWN ARROW
Add a toolbar button to a menu. When you type this shortcut key and then click a toolbar button, Microsoft Word adds the button to the appropriate menu. For example, click Bullets on the Formatting toolbar to add the Bullets command to the Format menu.
ALT+CTRL+= (equal sign)
Remove a command from a menu. When you type this shortcut key and then select a menu command, the command is removed. You can add the menu command back to the menu if you change your mind.
ALT+CTRL+- (dash key)
Customize the shortcut key for a menu command. When you type this shortcut key and then select a menu command, the Customize Keyboard dialog box opens so you can add, change, or remove the shortcut key.
ALT+CTRL++ (plus key on numeric keypad)
Note You can use the keyboard to select any menu command on the menu bar. Press ALT to select the menu bar. Press the letter that is underlined in the menu name that contains the command you want. In the menu that appears, press the letter underlined in the command name that you want.
Create a new document of the same type as the current or most recent document. CTRL+N
Open a document. CTRL+O
Close a document. CTRL+W
Split the document window. ALT+CTRL+S
Remove the document window split. ALT+SHIFT+C
Save a document. CTRL+S
Find text, formatting, and special items. CTRL+F
Repeat find (after closing Find and Replace window). ALT+CTRL+Y
Replace text, specific formatting, and special items. CTRL+H
Go to a page, bookmark, footnote, table, comment, graphic, or other location. CTRL+G
Switch between documents or sections of a document, and between a document and an open e-mail message if you use Word as your e-mail editor. ALT+CTRL+Z
Open a list of browse options; use the arrow keys to select an option, and then press ENTER to browse through a document by using the selected option. ALT+CTRL+HOME
Cancel an action. ESC
Undo an action. CTRL+Z
Redo or repeat an action. CTRL+Y
Switch to print layout view. ALT+CTRL+P
Switch to outline view. ALT+CTRL+O
Switch to normal view. ALT+CTRL+N
Switch to Reading View. ALT+R
Expand or collapse subdocuments in a master document. CTRL+\
Promote a paragraph. ALT+SHIFT+LEFT ARROW
Demote a paragraph. ALT+SHIFT+RIGHT ARROW
Demote to body text. CTRL+SHIFT+N
Move selected paragraphs up. ALT+SHIFT+UP ARROW
Move selected paragraphs down. ALT+SHIFT+DOWN ARROW
Expand text under a heading. ALT+SHIFT+PLUS SIGN
Collapse text under a heading. ALT+SHIFT+MINUS SIGN
Expand or collapse all text or headings. ALT+SHIFT+A
Hide or display character formatting. The slash (/) key on the numeric keypad
Show the first line of body text or all body text. ALT+SHIFT+L
Show all headings with the Heading 1 style. ALT+SHIFT+1
Show all headings up to Heading n. ALT+SHIFT+n
Insert a tab character. CTRL+TAB
Print a document. CTRL+P
Switch in or out of print preview ALT+CTRL+I
Move around the preview page when zoomed in. Arrow keys
Move by one preview page when zoomed out. PAGE UP or PAGE DOWN
Move to the first preview page when zoomed out. CTRL+HOME
Move to the last preview page when zoomed out. CTRL+END