dance
Google
Web rajeshkuma2006.blogspot.com

Monday, March 24, 2008

கம்ப்யூட்டர் வைரஸ்

Computer virus, கணினி வைரஸ் கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே பிரதியெடுக்கும் .exe மற்றும் ஏனைய கோப்புக்களைப் பாதிக்கும் ஓரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அக்கக்கணினி வலையமைப்பு) தாவி செல்லக்கூடிய சேமிப்பு ஊடகங்கள் எடுத்துக்காட்டாக பிளாஷ் டிஸ்க் போன்றவற்றாலும் பரவுகின்றது.

அநேகமான கணினிகள் இன்று இணையத்துடனும் அகக்கணினி வலையமைப்புடனும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கணினிகள் virusகளைப் பரப்புவதற்கும் உதவுகின்றன. இன்றைய virusகள் உலகாளவிய வலையமைப்பு, மின்னஞ்சல் மற்றும் கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புக்களூடாகவும் பரவுகின்றன.

கணினி வைரஸ் ஆனது இயற்கையான virus போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும். virus பலவாறு பரப்பப்படும் இவ்வகைச் செயற்பாடானது கெட்டமென்பொருள் en:Malware எனப்படும். பொதுவான பாவனையில் கணினி வைரஸ் என்பது கணினிப் புழுக்கள் en:Computer worm, நல்ல வைரஸ்கள்போல் நடிக்கும் வைரஸ்கள் en:Trojan horse (computing) எல்லாமே வைரஸ் என்றே அழைக்கப் படினும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபாடானவை. இவை கிருமி வைரஸ்களை ஒவ்வொரு கணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கின்றன. இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிவைரஸ்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது கடன் அட்டை இலக்கங்களைத் தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்கின்றன. சில சமயங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டுகளையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன. பின்னர் அவைகளைத் தனது எஜமானனுக்கு (Owner of that virus) இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன.

சில வைரஸ்கள் Programகளில் பாதிப்பினை ஏற்படுத்தி கணினிக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் கோப்புக்களை அழித்தல், கோப்புக்களின் குணாதிசயங்களை மாற்றுதல் (எடுத்துக்காட்டாக சிஸ்டம் கோப்பாகவோ, மறைக்கப்பட்ட கோப்பாகவோ) மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் பயனர் பாவிக்கும் நிரல்களுடன் குழப்பத்தை உண்டு பண்ணிக் கணினியை நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறான தவறான நிரல்களினால் கணினியில் தேவையான தரவுகளிற்கு அழிவுகள் ஏற்படலாம்.

கணினி வைரஸ்கள் கணினியில் அழித்தலை உண்டு பண்ணவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. சில வைரஸ்கள் கணினி ஆரம்பிப்பதை மெதுவாக்கும் அல்லது கணினி வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். சில வைரஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குணடுகள் போன்று குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் செயற்படும். பொதுவாக விண்டோஸ் கணினிகள் 30 செக்கண்களில் ஆரம்பிக்கும் இவை 40 வரை செக்கண் கூட எடுக்கலாம் மாறாக ஒரு கணினி விண்டோஸ் இயங்குதளத்தை ஆரம்பிக்க 1 நிமிடமளவில் எடுத்தால் முதலில் வைரஸ்களைச் சந்தேகிக்கலாம்.

2 comments:

')) said...

நன்பா! எனக்கு பிகேபி சார் பத்தி தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.அவர்ட்ட நீங்க யார் என்ன வேலை பார்த்துகொண்டிருக்கிரீர்கள்.என்று கேட்டதர்க்கு சொல்லமாட்ரார் மழுப்பிகொண்டிருக்கிறார். தயவுசெய்து நீங்களாவது சொல்லுங்க

')) said...

என் ஈமயில் rsankar20@gmail.com