dance
Google
Web rajeshkuma2006.blogspot.com

Wednesday, March 26, 2008

இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மன நோய் ஏற்படும்

இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்களுக்கு மன நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இது இன்டர்நெட் யுகம். இன்டர்நெட் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானவர்களால் வாழவே முடியாது என்ற நிலை உள்ளது. இ-மெயில், சாட்டிங் என்று ஒரு நாளின் பெரும் பொழுதை இன்டர்நெட்டிலேயே பலர் செலவழிக்கின்றனர். இது போதாது என்று இரவு நேரங்களில் கண்விழித்து இன்டர்நெட்டில் பலான படங்களைப் பார்க்கின்றனர். இப்படி தினமும் இன்டர்நெட்டே கதி என்று பல மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பவர்களை இன்டர்நெட் அடிமைகள் என்று மனநல டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரியாவில் சுமார் 12 லட்சம் இளைஞர்களும், சீனாவில் 1 கோடி பேரும் இன்டர்நெட்டுக்கு அடிமைகளாக உள்ளனர். இவர்களில் பலர், இன்டர்நெட் பார்ப்பதற்காக பள்ளி, கல்லூரி படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்டவர்கள். வேலையை ராஜினாமா செய்துவிட்டு இன்டர்நெட் பார்ப்பவர்களும் உண்டு.
இப்படிபட்டவர்கள் மனநோய்க்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அதிக நேரம் இன்டர்நெட் பார்ப்பதால், சாப்பிடும், தூங்கும் நேரம் கூட மறந்துபோய் விடுமாம். குடும்பம், நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவார்களாம். இன்டர்நெட் பார்க்க முடியாமல் போனால் கோபம், ஆத்திரம் அதிகம் வரும் என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும், சில நாட்களிலேயே மீண்டும் இன்டர்நெட் பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். அதை தடுக்க முடியவில்லை என்று மனநல டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2 comments:

')) said...

என்ன சார் செய்ய எல்லாத்தையும் நீங்கள்தான் பார்துக்கனும்,என்ன பார்க்குரீங்க நான் கடவுளைத்தான் சொன்னேன்.இந்த வேர்டுவெரிபிகேசனை எடுத்துவிடவும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.