dance
Google
Web rajeshkuma2006.blogspot.com

Monday, July 28, 2008

இலவசமாய் சாஃப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யலாம்


இன்றைய தலைப்பு போர்ட்டபிள் சாஃப்ட்வேர்.

பெயரை பார்த்தவுடனே பெரும்பாலானவர்க்கு புரிந்திருக்கும். இந்த சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று அதில் உள்ள Exe பைலை டபுள் கிளிக் செய்தாலே போதும். இயங்கத் தொடங்கி விடும்.

கையில் கிடைக்கும் சாஃப்ட்வேர்களை எல்லாம் இன்ஸ்டால் செய்து கொண்டேயிருந்தால் போகப் போக நமது கணிணி மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடும். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக போர்ட்டபிள் சாஃப்ட்வேர் உள்ளது. பெரும்பாலான போர்ட்டபிள் சாஃப்ட்வேர்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.Google-ல் Download Portable Software என்று கொடுத்தால் நிறைய தளங்கள் நமது பார்வைக்கு கிடைக்கின்றன.

என்னதான் போர்ட்டபிள் சாஃப்ட்வேர்கள் இந்த வகையில் பயனுள்ளதாக இருந்தாலும் அதில் முழுமையான சாஃப்ட்வேர்களில் சில வேலைகளை செய்ய முடியாது. உதாரணமாக Corel Draw Portable சாஃப்ட்வேரில் டிசைன் செய்தவைகளை Save செய்ய முடியாது. VLC Media Player Portable Software Open ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

இப்படி பிரச்சனைகள் இருந்தாலும் நிறைய பேர் Portable சாஃப்ட்வேர்களை பயன்படுத்ததான் செய்கின்றனர்.

உங்களுக்காக போர்ட்டபிள் சாஃப்ட்வேர்களை தரும் லிங்க்குகள் கீழே தரப்பட்டுள்ளன.

Portablefreeware
Portableapps
Softpedia.com/get/PORTABLE-SOFTWARE/
Softwareportables.blogspot.com
Downloadsoftwarez.blogspot.com

Sunday, July 20, 2008

C Driveஐ மறைக்க வேண்டுமா?



நம்மில் பலர் பெர்சனல் ஃபைல்களை உருவாக்கி அதை மறைக்க பல்வேறு பிரயத்தணங்கள் செய்வர். அதற்கு நிறைய சாஃப்ட்வேர்கள் கூட இருக்கின்றன. இதையெல்லாம் விட எளிய வழி நமது Windows XPயிலேயே உள்ளது. அந்த எளிய வழி ஃபைல் இருக்கும் Driveஐயே Hide செய்ய வேண்டியதுதான். இது தேவையில்லாத வேலை என்றுதான் அனைவரும் சொல்வர். உங்களிடம் எத்தனை பார்ட்டீசியன்கள் உள்ளன என்று உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும்போது வேறு யாரும் அந்த டிரைவை Open செய்ய மாட்டார்கள். அதனால் இது எளிதான பாதுகாப்பு முறையே.

இதற்கு முதலில் Start Menuவை கிளிக் செய்து Run என்பதை தேர்வு செய்யவும். அதில் gpedit.msc என்பதை டைப் செய்து ok கிளிக் செய்யவும். இப்போது Group Policy என்ற விண்டோ Open ஆகும். User Configuration என்பதில் Administrative Templates என்பதன் அருகில் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும். இப்போது Windows Components --> Windows Explorer என்பதை தேர்வு செய்யவும். வலதுபுறம் தோன்றும் Listல் Hide these specified drives in my computer என்பதில் Double Click செய்யவும். தோன்றும் விண்டோவில் Enabled என்னும் Radio Buttonஐ தேர்வு செய்யவும். கீழே தோன்றும் List Boxல் எந்த Driveஐ Hide செய்ய வேண்டுமோ அந்த Driveஐ செலக்ட் செய்து ok Click செய்யவும். இப்போது அந்த டிரைவ் மறைந்திருப்பதை பார்க்கலாம்.

மறைக்கப்பட்ட டிரைவை பார்க்கவேண்டுமானால் Windows Explorer Address Barல் எந்த டிரைவை பார்க்க வேண்டுமோ அந்த டிரைவின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும். எழுதியது புரியவில்லை என்றால் அருகில் உள்ள Videoவை பாருங்கள்.

Wednesday, July 16, 2008

Rapid Search



எனது ரேப்பிட்ஷேரில் தேடுவது எப்படி என்ற பதிவிற்கு விமர்சனம் எழுதிய திரு.ராஜா அவர்களுக்கு நன்றி. தாங்கள் கூறியதை நானும் செய்து பார்த்தேன். முன்பு வேலை செய்து கொண்டிருந்தது தற்போது வேலை செய்யவில்லை தான்.

ரேப்பிட்ஷேரில் தேடுவது மிகவும் கடினமாகத்தான் எனக்கும் நேற்று வரை இருந்தது. தற்போது அந்த பிரச்சனை தீரப்போகிறது. ரேப்பிட்ஷேரில் தேடுவதற்காகவே உள்ளதுதான் Rapid Search Engine இந்த வலைத்தளத்தில் எதையாவது தேடச் சொன்னால் அது வலைத்தளங்களிலிருந்து ரேப்பிட்ஷேரில் உள்ள ஃபைல்களை மட்டும் எடுத்துத் தருகிறது. மேலும் இதில் Ajaxயையும் பயன்படுத்தலாம். Ajax பயன்படுத்துவதன் மூலம் நமது தேடலுக்கான பதில்கள் மிகவும் விரைவாக கிடைக்கிறது. இது அனைவருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, July 15, 2008

RapidShare-ல் தேடுவது எப்படி?



ரேப்பிட்ஷேர் - அனைவருக்கும் தெரிந்த வெப்சைட்.

தற்போது ஃபைல்களை ட்ரான்ஸ்பர் செய்வதற்கு பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

பெரும்பாலான சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்ய தேடும்போது பெரும்பாலும் ரேப்பிட்சேர் வெப்சைட்டில் தான் கிடைக்கும்.

இந்த வெப்சைட்டில் இலவச பயனராக இருந்தால் டவுன்லோட் செய்வதற்கு சில நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இக்காலத்தில் யாரும் காத்திருக்க விரும்புவதில்லை. அதற்கு கீழே உள்ள ஸ்கிரிப்ட்டை காப்பி செய்து அட்ரஸ் பாரில் வைத்து எண்டர் செய்யவும்.

javascript:alert(c=0)

தற்போது ஒரு சின்ன தகவல் பெட்டி தோன்றும். அதில் Ok கிளிக் செய்தால் உடனே டவுன்லோட் ஆவதற்கான சுட்டி கிடைக்கும்.

மேலும் Googleன் மூலம் பல ஃபைல்களை Rapidshareல் கண்டுபிடிக்க PKP அவர்கள் எழுதிய Rapidshare-ல் தேடுவது எப்படி? பதிவை பார்க்கவும்.

உதாரணத்திற்கு அவர் பதிவில் உள்ளதில் சில

கூகிள் வழி rapidshare-ல் தேட Google -ல் இதை டைப்புங்கள்

Video files எனில்
avi|mpg|mpeg|wmv|rmvb site:rapidshare.de

Music files எனில்
mp3|ogg|wma site:rapidshare.de

Programs,Applications files எனில்
zip|rar|exe site:rapidshare.de

eBooks files எனில்
pdf|rar|zip|doc|lit site:rapidshare.com

(Optionally add the word what you are particularly looking for.
உதாரணமாக தமிழ் சம்பந்த பட்ட mp3 கோப்புகள் தேட
mp3|ogg|wma site:rapidshare.de tamil என கூகிளில் தட்டுங்கள்)

Friday, July 4, 2008

கற்றுக் கொள்வோம்


எல்லாரும் எல்லாமும் தெரிந்து இருக்க முடியாது. அனைவருக்கும் எதிலாவது சந்தேகம் நிச்சயமாய் ஏற்படும். முன்பெல்லாம் சந்தேகம் ஏற்படும்போது அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் தான் கேட்க முடியும். அதில் சிலர் நேரடியாக கேட்பதற்கு வெட்கப்படுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இணைய வழிக் கற்றல் பெருகிவிட்டது. Googleல் Tutor என்று தேடினால் நிறைய வெப் பக்கங்கள் கிடைக்கின்றன.

அப்படித் தேடியபோது கிடைத்ததுதான் Good Tutorials. இதில் போட்டோஷாப், ஃப்ளாஷ், மாயா, பி.ஹெச்பி. மேலும் சில சாஃப்ட்வேர்களைப் பற்றிய Tutorகள் கிடைக்கின்றன.

இதே போன்று W3Schools என்னும் தளத்தில் வெப் டிசைனிங் பற்றிய சில குறிப்புக்கள் உள்ளன.

Flash பற்றி படிக்க விரும்புவர்களுக்கு நிச்சயம் இந்த சுட்டி உதவியாக இருக்கும்.