dance
Google
Web rajeshkuma2006.blogspot.com

Sunday, July 20, 2008

C Driveஐ மறைக்க வேண்டுமா?



நம்மில் பலர் பெர்சனல் ஃபைல்களை உருவாக்கி அதை மறைக்க பல்வேறு பிரயத்தணங்கள் செய்வர். அதற்கு நிறைய சாஃப்ட்வேர்கள் கூட இருக்கின்றன. இதையெல்லாம் விட எளிய வழி நமது Windows XPயிலேயே உள்ளது. அந்த எளிய வழி ஃபைல் இருக்கும் Driveஐயே Hide செய்ய வேண்டியதுதான். இது தேவையில்லாத வேலை என்றுதான் அனைவரும் சொல்வர். உங்களிடம் எத்தனை பார்ட்டீசியன்கள் உள்ளன என்று உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும்போது வேறு யாரும் அந்த டிரைவை Open செய்ய மாட்டார்கள். அதனால் இது எளிதான பாதுகாப்பு முறையே.

இதற்கு முதலில் Start Menuவை கிளிக் செய்து Run என்பதை தேர்வு செய்யவும். அதில் gpedit.msc என்பதை டைப் செய்து ok கிளிக் செய்யவும். இப்போது Group Policy என்ற விண்டோ Open ஆகும். User Configuration என்பதில் Administrative Templates என்பதன் அருகில் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும். இப்போது Windows Components --> Windows Explorer என்பதை தேர்வு செய்யவும். வலதுபுறம் தோன்றும் Listல் Hide these specified drives in my computer என்பதில் Double Click செய்யவும். தோன்றும் விண்டோவில் Enabled என்னும் Radio Buttonஐ தேர்வு செய்யவும். கீழே தோன்றும் List Boxல் எந்த Driveஐ Hide செய்ய வேண்டுமோ அந்த Driveஐ செலக்ட் செய்து ok Click செய்யவும். இப்போது அந்த டிரைவ் மறைந்திருப்பதை பார்க்கலாம்.

மறைக்கப்பட்ட டிரைவை பார்க்கவேண்டுமானால் Windows Explorer Address Barல் எந்த டிரைவை பார்க்க வேண்டுமோ அந்த டிரைவின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும். எழுதியது புரியவில்லை என்றால் அருகில் உள்ள Videoவை பாருங்கள்.

4 comments:

')) said...

மற்ற டிரைவ்களை மறைக்கிறது ஓகே. சி டிரைவை மறைத்துவிட்டு என்ட கணிணியில சி டிரைவ் இல்லையே எண்டால் களத்துமேட்டுக் கந்தசாமிகூட நம்பமாட்டான்யா..

கடைசிப் Partition ஐ மறைத்தால் மட்டுமே யாரும் அறியமாட்டார்கள் இம்முறையில்.

தகவலுக்கு நன்றி.

மதுவதனன் மௌ.

')) said...

அருமையான பயனுள்ள தகவ்ல்.கொடுத்த
தகவ்ல்களை கோப்பில் சேமிக்க cut and
paste பண்ண முடியவில்லை.இது எப்படி.விளக்கவும்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

')) said...

சி வந்தகட்டை மறைப்பதை விட சிறந்த வழி, டி, இ அல்லது (உங்களுது வந்தகடு பிரிவுகளில்) கடைசி பிரிவை மறைப்பது.

வின்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் சி தகடு தெரியாவிட்டால், அதுவும் விண்டோஸ் இயங்கு தளம் உள்ள வன் தகடு தெரியவில்லை என்றால் அதை தேடி பார்க்கும் ஆவல் அனைவருக்கும் எழும். மேலும் DOS Prompt சென்று கண்டுபிடிப்பது எளிது

')) said...

புகைப்ப்டப் பேழைக்கு வருகை தந்து பாரட்டியதுக்கு நன்றிகள்

தி.விஜய்