பதிவுகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. படிக்க ஆரம்பித்தால் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிடும் சக்தி படிப்பிற்கு உள்ளது என்பது உண்மைதான். தேர்வு நெருங்கியதால் படிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து பதிவுகளை எழுத நேரமில்லாமல் போய்விட்டது.
வீடியோ பைல்களை அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க வேண்டி உள்ளது. படம் பார்த்தல், குழந்தை பருவத்தில் எடுத்த வீடியோக்கள் மற்றும் பல வீடியோ பைல்களை பார்க்க வேண்டி உள்ளது. இதுபோன்ற வீடியோ பைல்களை பார்ப்பதற்கு அதிகமானோர் பயன்படுத்துவது விண்டோஸ் மீடியா பிளேயர் தான். காரணம் இது விண்டோஸ் உடன் இணைந்து கிடைப்பதே. இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக பல ஃபார்மட் வீடியோ பைல்கள் வந்துவிட்டன. நிறைய ப்ளேயர்கள் வந்துவிட்டன. அதில் சில ஃபார்மட் பைல்களை சில ப்ளேயர்களில் பார்க்க முடியாது. உதாரணமாக விண்டோஸ் மீடியா ப்ளேயரில் 3GP, DVD பைல்களை பார்க்க முடியாது. அதற்காக அதற்குரிய Codec பைல்களை Download செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை குறைக்கும் விதத்தில் உள்ளதுதான் VLC Media Player. இதில் 24 formatகளில் உள்ள பைல்களை பார்க்க முடியும்.
பல்வேறு பார்மட்களில் உள்ள வீடியோ பைல்களை பார்ப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
Download செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
Download – VLC Media Player
VLC Media Player பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
தினம் ஒரு வெப்சைட்
அனைத்து விதமான புத்தகப் பிரியர்களுக்கு ஏற்ற இ-புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்திட கிளிக் செய்ய வேண்டிய முகவரி Allfree.fermanaziz
2 comments:
Thank u. Its very useful for me
நல்ல முயற்சி...
pkp அளவு வளர வாழ்த்துக்கள்
Post a Comment