dance
Google
Web rajeshkuma2006.blogspot.com

Friday, June 13, 2008

Maya Learning Edition



கணிப்பொறித் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கிராமத்தில் வசிக்கும் பாமர மக்களைக்கூட அதிசயிக்க வைக்கும் சக்தி கிராஃபிக்ஸ் துறைக்கு உண்டு. சினிமாவில் த்ரில்லிங்கான சில காட்சிகளை கிராஃபிக்ஸ் மூலம் எடுத்திருப்பார்கள். ஆனால் நம் கிராமத்து இளசுகள் நம்ம தலைவர் ரொம்ப ரிஸ்க் எடுத்திருப்பார் என்று சொல்வார்கள். ஆனால் இதில் ரிஸ்க் எடுப்பவர்கள் சினிமா நடிகர்கள் அல்லர். கம்ப்யூட்டர் முன் மணிக்கணக்கில் உட்கார்ந்து அதை டிசைன் செய்தவர்களே.

கணிப்பொறித் துறையில் சாதிக்க + சம்பாதிக்க விரும்பும் பலர் தேர்ந்தெடுப்பது மல்டிமீடியா துறையே. அந்த அளவிற்கு வருமானத்தையும், புகழையும் கொடுக்கக்கூடியது மல்டிமீடியா துறை. இந்த துறையில் பலதரப்பட்ட மென்பொருள்கள் இருந்தாலும், பலரும் அறிந்தது மாயா மென்பொருளே.

மாயா மென்பொருளின் சமீபத்திய வெளியீடான மாயா 8.5 சாஃப்ட்வேரை டோரண்ட் மூலம் டவுன்லோட் செய்யும்போது Macintoshக்கு உரிய சாஃப்ட்வேர் மட்டுமே கிடைக்கிறது. என் போன்று அந்த சாஃப்ட்வேரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லை. அதற்கு Maya Personal Learning Edition சாஃப்ட்வேர் போதும். இந்த பதிப்பை பெற விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதன்பின் கிடைக்கும் Linkல் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

மாயா சாஃப்ட்வேரை பற்றிய Tutor Video பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Download : Understanding 3D Animation E-Book

1 comments:

Anonymous said...

Its ok