தகவல் தொழில்நுட்ப மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மே 2000ல் நிறைவேறியது. ஆகஸ்டு 2000ல் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 ஆக சட்ட வடிவம் பெற்றது. தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ல் இணைய சட்டங்கள் உள்ளன.
தரவு திருட்டு
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சிறப்பு ஷரத்துகளில் சில: ஆபாச உள்ளடக்கம் மற்றும் படங்களை பிரசுரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆபாச உள்ளடக்கம் குறித்த வரையறை ஆபாச உள்ளடக்கங்களை சிறுவர்களுக்கு விற்பது சட்டவிரோதம்
ஆபாச உள்ளடக்கம் மற்றும் படங்களை பிரசுரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு XI பத்தி 67ன் படி, இந்திய அரசு இணைய வழி ஆபாச உள்ளடக்கம் மற்றும் படங்களை விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தெளிவாக கருதுகிறது. இந்த பத்தி இவ்வாறு குறிப்பிடுகிறது:
"எலெக்ட்ரானிக் வடிவத்தில் ஆபாசமாக தோற்றமளிக்கும் தகவல்களை பிரசுரம் செய்வது: இணையப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பார்ப்போர் அல்லது படிப்போர் அல்லது கேட்போர் யாருடைய மனதிலும் காம உணர்வினைத் தூண்டி அவர்களை தவறான பாதைக்கு தூண்டும் சக்தி வாய்ந்த ஆபாசமான உள்ளடக்கங்களை வெளியிடுவோர், பரப்புவோர் அல்லது எலெக்ட்ரானிக் வடிவத்தில் வெளியாக காரணமாக இருப்போர் யாராக இருப்பினும், அவர்கள் முதன் முறை குற்றம் உறுதி செய்யப்பட்டவராய் இருந்தால் 5 ஆண்டு காலம் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரையான அபராதத்திற்கு தகுதி உடையவராகவும், இரண்டாம் முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறையாக குற்றம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால் 10 ஆண்டு காலம் வரை சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் வரையான அபராதத்திற்கு தகுதி உடையவராகவும் ஆகிறார்".
ஆபாச உள்ளடக்கத்திற்கான வரையறை இந்திய குற்றவியல் சட்டம் 1860, செக்ஷன் 292 கூறுகிறது: "துணை பிரிவு (2)க்காக, இணையப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பார்ப்போர் அல்லது படிப்போர் அல்லது கேட்போர் யாருடைய மனதிலும் காம உணர்வினைத் தூண்டி அவர்களை தவறான பாதைக்கு தூண்டும் சக்தி வாய்ந்த எந்த ஒரு புத்தகம், துண்டுப் பிரசுரம், பேப்பர், கையால் எழுதியது, வரைபடம், ஓவியம் சித்திரம் அல்லது வேறு எந்த ஒரு பொருளும் ஆபாசமாக கருதப்படும்". ஆபாச உள்ளடக்கங்களை சிறுவர்களுக்கு விற்பது சட்டவிரோதம் இந்திய குற்றவியல் சட்டம் 1860, செக்ஷன் 293 ஆபாசமான பொருட்களை சிறுவர்களுக்கு விற்பதற்கு எதிரான சட்டத்தை தெளிவாக குறிப்பிடுகிறது. இந்த பிரிவில் கூறப்படுவதாவது: "ஐபிசி 292ல் (வரையறை கொடுக்கப்பட்டுள்ளது) குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு ஆபாச உள்ளடக்கங்களையும் 20 வயதுக்கு குறைந்த எந்த ஒரு சிறுவருக்கும் விற்பதோ, வாடகைக்கு தருவதோ, விநியோகம் செய்வதோ, பார்வையிட காண்பிப்பதோ அல்லது பிற வழிகளில் அனுப்புவதோ அல்லது இது போன்ற செயல்களை செய்வதாக கூறி ஆர்வத்தை தூண்டிவிடுவதோ தண்டனைக்குரியதாகும். (முதன் முறையாக குற்றம் உறுதி செய்யப்பட்டவருக்கு 3 வருடம் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம், இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட முறையாக குற்றம் உறுதி செய்யப்படுபவருக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம்)". Thanks to : http://securefirst.in